தனித் திருச்சபை
Appearance
தனித் திருச்சபை (ஆங்கில மொழி: particular church; இலத்தீன்: ecclesia particularis) என்பது திருச்சபைச் சட்டத் தொகுப்பின்படி ஆயர் அல்லது அவருக்கு இணையான அதிகாரி ஒருவரால் வழிநடத்தப்படும் திருச்சபை சமூகத்தைக்குறிக்கும். கத்தோலிக்கத் திருச்சபையானது தனித்திருச்சபைகளின் கூட்டமைப்பாக உள்ளது;
இருவகையான தனித் திருச்சபைகள் உள்ளன:
- தள திருச்சபைகள். மறைமாவட்டம் என்பது இவ்வக்கை திருச்சபைகளில் மிகவும் அறியப்பட்டதாகும். இதனோடு எல்லை சார்ந்த மேல்நர் மறை ஆட்சிவட்டம், எல்லை சார்ந்த ஆதீனம், திருத்தூதரக மறை ஆட்சி வட்டம், திருத்தூதரக ஆளுகை வட்டம் மற்றும் நிரந்தரமாக நிறுவப்பட்ட திருத்தூதரக நிர்வாகம் ஆகியவையும் இவற்றில் அடங்கும்.[1]
- தன்னாட்சி அதிகாரமுடைய தனித் திருச்சபைகள்: இவை ஒரு குறிப்பிட்ட வழிபாட்டுமுறை, இறையியல் மற்றும் சட்டம் சார் மரபு ஆகியவற்றை தம்முள் ஒத்து இருக்கும் திருச்சபைகளைக்குறிக்கும். இவற்றை வெறுமனே வழிபாட்டுமுறை எனவும் அழைப்பர்.[2] இவற்றுல் மிகப்பெரிய திருச்சபை, இலத்தீன் வழிபாட்டுமுறை திருச்சபையாகும்.பிற திருச்சபைகள் கூட்டாக கத்தோலிக்க கீழைத்திருச்சபைகள் என அழைக்கப்படுகின்றன.